வரலாறு:
புராணங்களின்படி வராகி அம்மன் துர்க்கை அம்மனின் ஒரு அவதாரம் என்கிறார்கள்.
ஒரு பக்கம், ரத்த பீஜன் என்கிற அரக்கனை துர்கா தேவி வதம் செய்யும்போது, தன்னுடைய மகா சக்தியை ஏழு பாகங்களாக பிரித்து கண்ணியர்களை உருவாக்கி அவர்களை ரத்த பிஜனுடன் போரிட அனுப்பியதாகவும், மற்றொரு பக்கம் திருமால், வராக வடிவம் எடுக்கும் போது அவருடைய துணையாக லக்ஷ்மி அம்மன் வடிவம் எடுத்து தான் வராகி அம்மன் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
மாந்திரீகம் மற்றும் தாந்திரீக வழிபாடு செய்பவர்களுக்கு வராகி அம்மன் தான் குலதெய்வமாகத் திகழ்கிறார். சங்கத்தமிழ் காலத்தில் இருந்து வராகி அம்மன் வழிபாடு நாட்டில் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. தஞ்சை பெருவுடையார் கோவில் ராஜராஜன் சோழன் கட்டுவதற்கு காரணமாக இருந்ததே வராகி அம்மன் தான் என்றும் வரலாறு கூறுகிறது. ராஜராஜ சோழன் பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கான இடத்தை தேடிக்கொண்டிருந்த போது, வராகி அம்மன் காட்டுப்பன்றி உருவம் எடுத்து வந்து அவருக்கு வழி வழிகாட்டியதாகவும் ஆதலால் தான் தஞ்சை பெருவுடையார் கோவிலில் வராகி அம்மனுக்கு ஒரு சன்னதியே அமைத்ததாகவும் வரலாற்றுச் சிறப்பு கூறுகிறது.

வராகி அம்மனின் வடிவம்:
வராகி அம்மன் காட்டுப்பன்றியின் தலையும், பெண் தேக வடிவமும் கொண்டவர். எப்பொழுதும் கருப்பு நிற ஆடைகளை விரும்பி அணிந்து, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவராகவே காட்சி அளிக்கிறார். வராகி அம்மனின் எட்டு திருக்கரங்கள் அவருடைய சிறப்பம்சம். ஒவ்வொரு கையிலும்; ஏர்களப்பை, சூலம், ஸ்ரீசக்கரம், கதாயுதம், சங்கு, அங்குசம், அபய மற்றும் வரத முத்திரைகளுடன் காணப்படுகிறார்.
Also check out our 2 Inches Copper Varahi Amman 8 Hands
யாரெல்லாம் வராகி அம்மனை வழிபடலாம்?
சக்தி வாய்ந்த தெய்வங்களில் முதன்மையானவராக திகழ்கிறார் வராகி அம்மன். ஆசிர்வாதங்களையும் பாதுகாப்பையும் அள்ளித் தருவதில் வராகி அம்மனுக்கு ஈடு இணையில்லை. தீய சக்தியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றித் தடைகளை எல்லாம் நீக்கும் காவல் தெய்வமாக இருக்கிறார். இந்து மரபின்படி பெண்கள் கருவுறுவதற்கும், நோய்கள் தீரவும் வராகி அம்மனை வழிபடலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.
வராகி அம்மனை வழிபடும் போது உடலும் மனமும் சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
Also check out our Original Karungali Wood Varahi Amman 9 Inches

வீட்டில் வராகி அம்மனை எவ்வாறு வழிபடுவது?
வராகி அம்மனின் பல பக்தர்கள் வீடுகளில் வராகி அம்மன் சிலை மற்றும் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்கிறார்கள். வீட்டில் வராகி அம்மனை வழிபடும்போது சுத்தமாகவும் மனப்பூர்வமாகவும் மன உறுதியோடு வழிபட வேண்டும்.
அம்மனுக்கு வழிபடுவதற்கு தனியாக ஒரு சுத்தமான இடத்தை அமைக்க வேண்டும். அதைத் தூய்மையான முறையிலும், மலர்கள் மற்றும் விளக்குகள் கொண்டும் அலங்கரித்து பராமரிக்க வேண்டும். வராகி அம்மனுக்கு வழிபாடு சடங்குகளை மேற்கொள்ளும் போது நேர்மையாகவும் பக்தி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
வராகி அம்மனின் பிரசித்தி பெற்ற கோவில்கள்:
வராகித் தாயின் கோவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகமாக காணப்படுகிறது.
- தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் முதல் கோவிலாக திகழப்படுவது, வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள, ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் வராகி அம்மன் வழிபாடு ஸ்தலம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
- திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் செரைக்கன்னிமார் கோவில் வராகி அம்மன் அருள் பாவிக்கிறார்.
- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் நரிப்பட்ட ஊரில் வராகி அம்மன் திருக்கோவில் இருக்கிறது.
- கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சப்த மாதர்கள் கோவில் உள்ளது. இங்கு வராகி அம்மனுக்கு பிரத்தியேகமாக பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் மகா யாகம் மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை உள்ளத்துடன் வராகி அம்மனை வழிபட்டால், நிச்சயம் காரியம் நிறைந்திடவும், மன சஞ்சலம் நீங்கி மன நிம்மதி பெறவும், அம்மன் துணை நிற்பார்!



