Skip to main content
Enjoy FREE DELIVERY orders above Rs. 1000!

Use Coupon: WELCOME10 Get 10% Off for order value above Rs. 1000/-

வைகாசிவிசாகம்

Magizh HandicraftsPublished: April 17, 20261 min read

வைகாசி விசாகம், முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னிவடிவமாக தோன்றிய நாள் ஆகும். வைகாசி மாதத்தில், பௌர்ணமியன்று விசாக நக்ஷத்திரம் இணைந்து வரும் நாளை கொண்டாடும் இந்த திருநாள், முருகப்பெருமானின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

முருகனுக்குரிய விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்ததால், இந்த நாளை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறோம்.பக்தர்கள் விரதமிருந்து, முருகனுக்கு உகந்த செம்பருத்தி, அரளி மலர்களால் அலங்கரித்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது சிறப்பு.

 

வைகாசிவிசாகம்

வைகாசிவிசாகம் – வெற்றிவேலனின்அவதாரம்!

வரலாறு:

ஞானப்பண்டிதனான தமிழ்க்கடவுள் அவதரித்த தினம் இன்று!


    வைகாசி விசாகம், முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னிவடிவமாக தோன்றிய நாள் ஆகும். வைகாசி மாதத்தில், பௌர்ணமியன்று விசாக நக்ஷத்திரம் இணைந்து வரும் நாளை கொண்டாடும் இந்த திருநாள், முருகப்பெருமான் வழிப்பாட்டில் முக்கியமான நாட்களிலொன்றாக கருதப்படுகிறது.

 

 

வைகாசிவிசாகம் – வெற்றிவேலனின்அவதாரம்!

     27 நட்சத்திரங்களில், விசாகநட்சத்திரமும், கிருத்திகைநட்சத்திரமும் முருகருக்குரிய உகந்த விரதவழிப்பாட்டு நாட்கள் ஆகும். கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனின் பரிபாலகர்கள் ஆறுதாமரைமலர்களிலிருந்து வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்கள் சிறப்பிக்கப்படுகின்றனர். அதேபோல, முருகர் விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால், இந்த நாளும் அவருக்குரியதாகக் கருதப்படுகிறது. ஞானத்திற்குரிய நட்சத்திரமான விசாகத்தில் தோன்றியதால், குழந்தை பருவத்திலேயே தந்தைக்கு வேததிதி நற்பொருள் எடுத்துரைத்ததால், முருகனை ஞான பண்டிதன் என்றும் அழைக்கின்றோம்.

வைகாசி விசாகத்தின்வழிபாடு முறைகள்:

  • அதிகாலையில் எழுந்து, வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்து, கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்களால் முருகனை அலங்கரிக்க வேண்டும்.

  • செம்பருத்தி, அரளி போன்ற செந்நிற மலர்களால் முருகனை அலங்கரிப்பது சிறப்பு.
  • கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலன்தரும்.
  • காவடி எடுப்பது பெரும் சிறப்பு. முடியாதவர்கள் உண்ணாவிரதமிருந்து அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம்.
  • பால், நெய் போன்ற பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
  • பாலில் தேன் கலந்தும் முருகனை வழிபடலாம்.

Also check out our Brass Bala Murugan Idol 

வைகாசி விசாக விரதத்தின் நன்மைகள்:

       முருகருக்குப் பலவிழாக்கள் இருந்தாலும், வைகாசி விசாகம் மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் வெற்றி கிடைக்கும், குழந்தைப்பேறு உண்டாகி, செல்வம் பெருகும் என்றும், ஆபத்துகள் நீங்கி, அனைத்து செல்வங்களும் பெருகும் என்ற நம்பிக்கை காலம் காலமாக நிலவுகிறது.

Also check out our Brass Thiruvachi Murugan Idol 

இந்தஆண்டுவைகாசிவிசாகம்:

      2024ஆம் ஆண்டு வைகாசி விசாகம், மே 23, வியாழக்கிழமை அன்று வருகிறது. மே 22, 2024 அன்று காலை 7:47 மணிக்கு ஆரம்பித்து, மே 23, 2024 காலை 9:15 மணிக்கு விசாக நட்சத்திரம் முடிவடைகிறது.

Share this Guide
வைகாசி விசாகம்: முருகன் பிறந்த நாள் சிறப்பு வழிபாடு